(Poem) அது ஒரு ஒலிம்பிக் காலம்

0
99

(நிஷவ்ஸ்)

உம்மா கம்பெடுக்க
ஊட்டைச் சுற்றியோட
சும்மா அதிரும்
சுவட்டு ஓட்ட ஒலிம்பிக்.
பள்ளிக் கூட சுவராலே
துள்ளிப் பாய்ந்தது போல்
உள்ளாரோ உயரம் பாய
ஒலிம்பிக் வீரர்கள்.
அடுத்த வீட்டு நாய் மீது
அரை செங்கல் எறிந்த சுகம்
கொடுத்திடுமோ ஒலிம்பிக்கின்
குண்டெறிதல் போட்டிகள்
கூச்சலுடன் வெள்ளத்தில்
குதூகலமாய் பாய்ந்த செயல்
நீச்சல் ஒலிம்பிக்கிலும்
நிச்சயம் மகிழ்வு தரும்
எறிகின்ற கல் பட்டு
எதிர் வீட்டு காய் விழுதல்
குறிசுடும் ஒலிம்பிக்கிலும்
கூடுதல் சுகம் தரும்
ஊஞ்சலில் ஏறி நின்று
ஊ என்று கயிறு உத்த
கோலூன்றிப் பாய்தலிலும்
மேலான மகிழ்வு தரும்
சின்ன வயதினிலே
பண்ணிய காரியங்கள்
ஒலிம்பிக் காலத்திலே
உள்ளத்தை தாலாட்டும்

LEAVE A REPLY