பெண்களுக்கான பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0
156

(எம்.ஐ.அப்துல் நஸார்)

unnamed (11)காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந் நபவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுவரும் உஸ்ரா ஸஈதா – பெண்களுக்கான 03 மாத கால பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 03ஆம் தொகுதி மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மஃஹதுஸ் ஸுன்னா அந் நபவிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

லஜ்னதுஸ் ஸுன்னா அந் நபவிய்யா மற்றும் மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரி ஆகியவற்றின் தலைவர்  எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு ஜம்இய்யதுஷ; ஷபாப் அமைப்பின் பணிப்பாளர்  எம்.எஸ்.எம்.ரஷீத்  (றியாழி) கலந்து கொண்டு சிறப்புரையினை நிகழ்த்தினார்.

மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபரும் உஸ்ரா ஸஈதா – மகிழ்ச்சியான குடும்பம் பெண்களுக்கான பயிற்சி நெறியின் இணைப்பாளருமான  எம்.ஏ.சீ.ஸெயினுல் ஆப்தீன் (மதனி) அவர்களினால் விஷேட உரையொன்று நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உஸ்ரா ஸஈதா தொடர்பான வீடியோ காட்சியொன்று காண்பிக்கப்பட்டதோடு அதற்கான விளக்கம்  எம்.ஐ.எம்.பஷPர் (மதனி) அவர்களால் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விபரங்கள்  ஏ.ஜே.ஜவாஹிர் (மதனி) அவர்களால் விளக்கப்பட்டன.

பயிற்சி நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 03ஆம் தொகுதி மாணவிகளுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் ஆசிரியைகளினால் வழங்கப்பட்டன.

இறுதியாக லஜ்னதுஸ் ஸுன்னா அந் நபவிய்யா மற்றும் மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரி ஆகியவற்றின் செயலாளரான  ஏ.ஏ.ஆரிஸ் (மதனி) அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.

உஸ்ரா ஸஈதா – பெண்களுக்கான பயிற்சி நெறியினை தொடரவுள்ள 04ஆம் தொகுதி மாணவிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி நெறிக்கு கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் அமைப்பு அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY