மஹிந்த ராஜபக்ஸ பிரபாகரனைவிட மோசமானவர் – அமைச்சர் சரத் பொன்சேக்கா

0
116

Sarath-Fonsekaஅமைச்சர் சரத் பொன்சேக்கா இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் விமர்சனம் தொடர்பில் அவர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

எனது ஆரம்பம் மஹிந்த ராஜபக்ஸவினால் உருவாகவில்லை. 35 வருடங்கள் நான் அவரின் ஆசீர்வாத்துடன் இராணுவத்தில் செயற்படவில்லை. இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி நான் அங்கு சேவையாற்றினேன். அவர் தவறிழைக்கும் போது அவருக்கு எதிராக பேச எனக்கு முதுகெலும்பு இருந்தது. மறு புறம் பிரபாரகன் என்பவர் ஓர் பயங்கரவாத தலைவர். அவருடைய அரசியல் கொள்கையின்படி அவர் நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்தார். எனினும் அவருக்கு எதிராக போராடிய இராணுவத்தின் குடும்பத்தை தாக்கும் வகையில் செயற்படவில்லை. எனினும் நான் ஜனநாயக ரீதியில் தேர்தலில் போட்டியிட்டமையினால் மஹிந்த ராஜபக்ஸ பொய்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னைத் தாக்கி சிறையில் அடைத்தார். அதுமட்டுமன்றி எனது பிள்ளைகளிடம் பழி வாங்கினார். எனவே அவ்வாறு செயற்பட்டவர் உறுதியாக பிரபாகரனைவிட மோசமானவர் என்பதனை நான் எந்த இடத்திலும் கூறுவேன்.

-NF-

LEAVE A REPLY