காத்தான்குடி சபா சர்வதேச பாடசாலையின் பெற்றோர் ஓன்று கூடலும் விளையாட்டு விழாவும்

0
97

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

unnamed (7)மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் காத்தான்குடி சபா சர்வதேச பாடசாலையின் பாலர் பிரிவு மாணவர்களின் 2016 இவ் வருடத்திற்கான பெற்றோர் ஓன்று கூடலும் விளையாட்டு விழாவும் 07.08.2016 நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு -சத்துருகொன்டான் சர்வோதய கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

சபா சர்வதேச பாடசாலையின் நிர்வாகப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.ஜவாகிர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு மாணவர்களும் அதிகளவான பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழும்,பரிசும்,கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு சபா சர்வதேச பாடசாலையின் பாலர் பிரிவு மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY