மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம் பணி பகிஸ்கரிப்பு

0
211

(விசேட நிருபர்)

unnamed (1)மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் மேற்பார்வையாளர்களின் கடமைக்கு வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தணினார்கள் என தெரிவித்து இன்று (8.8.2016) திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் மேற்பார்வையாளர்கள் ஒரு மணி நேர அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இன்று திங்கள் கிழமை காலை வழமை போன்று கடமை செய்து கொண்டிருந்த போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மேற்பார்வையாளர்களின் அலுவுலகத்திற்குள் நுழைந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் இருவர் அவர்களின் கடமைப்திவேட்டை பரிசோதித்ததுடன் அவர்களின் கடமைக்கு இடையூறு தெரிவித்ததாக கூறி சிற்றூழியர்கள் மேற்பார்வையாளர்கள் உடனேயே வேலை பகிஷ்கரிப்பில் குதித்தனர்.

இதையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் அடையாள ஆர்ப்பாட்டமும் சிற்றூழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களினால் மேற் கொள்ளப்பட்டது.

unnamed (2)நிலைமையைக் கட்டுப்படுத்த வைத்தியசாலை நிருவாகம் நடவடிக்கை எடுத்த போதிலும் பின்னர் மட்டக்களப்பு பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அங்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரட்ண மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு தலைவர் ராஜன் மயில்வாகனம் உள்ளிட்ட உறுப்பினர்கள் வைத்தியசாலை அதிகாரிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் மேற்பார்வையாளர்களுடன் கலந்துரையாடியதையடுத்து நிலைமை சுமூகமானது.
இதையடுத்து சிற்றூழியர்கள் மேற்பார்வையாளர்கள் தமது கடமைகளுக்கு திரும்பினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுமார் 600 சிற்றூழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்கள் அனைவரையும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் இருவர் அவமதித்து எமது கடமைக்;கு இடையூறை ஏற்படுத்தியதாகவும் அதனை கண்டித்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாகவும் இலங்கை சுதந்திர சுகாதார ஊழியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் எஸ்.தயாசீலன் தெரிவித்தார்.

அத்துடன் நோயாளர்கள் பாதிக்கப்படாத வகையில்; மீளவும் எமது சிற்றூழியர்கள் கடமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இங்கு பொலிசார் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY