(Video) ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீரரின் கால்கள் முறிந்தது!

0
115

samir-ait-saidதற்போது இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் ஜிம்னாஸ்டிக் தகுதிச் சுற்று போட்டியின்போது, வீரர் ஒருவரின் கால் ஒன்று உடைந்தமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சமிர் அய்ற் சைத் எனும் குறித்த வீரர், தனது திறமையை உலகுக்கு வெளிக்காட்டுவதற்காக வழங்கப்பட்ட குறித்த தகுதிச்சுற்று வாய்ப்பின் போது இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

26 வயதான சமிர், குறித்த போட்டியில் தனது உடல் அசைவுகளை சிறந்த முறையில் வெளிக்கொணர்ந்த நிலையில், இறுதியாக நிலத்தை தொடும்போது (Landing) அவரது கால் குறித்த விசையை தாங்காத நிலையில் முறிவடைந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

இதனை மிக அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சமிருக்கு இறுதியில் தனது முறிந்த காலை கைகால்களால் தாங்கிய வண்ணம் நிலத்தில் விழ நேரிட்டது.

அதேபோன்று குறித்த நிகழ்வினால் முறிவடைந்த கால் எலும்புகள் சாதாரண நிலைமைக்கு திரும்ப சுமார் 6 மாதங்கள் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் சமிரின் ஜிம்னாஸ்டிக் கனவு நிலைக்குமா என்பதிலும் சந்தேகம் நிலவுகின்றது.

https://www.youtube.com/watch?v=wAahs5oGPJM

LEAVE A REPLY