ஒலிம்பிக்கில் கொசோவோ நாட்டிற்கு முதல் பதக்கத்தை வாங்கிக் கொடுத்த ஜூடோ வீராங்கனை

0
138

201608081702550585_Rio-Olympics-2016-Kosovo-Majlinda-Kelmendi-wins-countrys_SECVPF2008-ம் ஆண்டு செர்பியாவில் இருந்து பிரிந்து தனி நாடானது கொசோவோ. இந்த நாடு கடந்த 1992-ல் இருந்து ஒலிம்பிக் கமிட்டியை தொடங்கினாலும், கடந்த 2014-ம் ஆண்டுதான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

இதனால் கொசோவோ நாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் முதன்முறையாக தங்கள் நாட்டு பிரதிநிதிகளாக ரியோ ஒலிம்பி்க்கில் கலந்து கொண்டனர்.

இந்த நாட்டைச் சேர்ந்த மஜ்லிந்தா கெல்மென்டி என்ற 25 வயது வீராங்கனை ஜூடோ 52 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இத்தாலி வீராங்கனை ஒடேட்டே ஜியுஃப்ரிடாவை எதிர்கொண்டார்.

இதில் மஜ்லிந்தா கெல்மென்டி இத்தாலி வீராங்கனையை தோற்கடித்து தங்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கொசோவோ வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இத்தாலி வீராங்கனை வெள்ளி பதக்கமும், ஜப்பான் மற்றும் ரஷியா நாட்டு வீராங்கனைகள் வெண்கல பதக்கங்களும் வென்றனர்.

LEAVE A REPLY