நேபாள காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கிய தனியார் ஹெலிகாப்டர்: 7 பேர் பலி

0
131

201608081600187747_7-feared-killed-in-private-chopper-crash-in-Nepal_SECVPFநேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே, தாயும், குழந்தையும் கோர்க்காவில் இருந்து இன்று பிற்பகல் ஒரு தனியார் ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் பதின் தண்டா காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு நேபாள ராணுவக் குழு மற்றும் பிற மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். ஆனால், மோசமான வானிலை நிலவுவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY