பாடசாலை மற்றும் வாழ்வாதார உதவிகளை பெற்றுத்தருமாறு தக்வா பள்ளிவாயல் கோரிக்கை

0
137

(M.T. ஹைதர் அலி)

unnamedமட்டு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியின் நாவலடி பிரதேசத்தில் அமைந்துள்ள தக்வா பள்ளிவாயல் நிருவாக சபையின் அழைப்பினையேற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இப்பிரதேசமானது ரஹ்மத் நகர், ஹிஜ்ரா நகர் மற்றும் மதீனா நகர் ஆகிய மூன்று கிராமங்களை உள்ளடக்கியதாக காணப்படுவதோடு, இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் பள்ளிவாயல் நிருவாக சபையினர் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தங்களது 1-5 ஆம் தரம் வரை கல்வியினை தொடர்வதற்கு 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கேணி நகர் அல்-மதீனா பாடசாலைக்கும், 6-11 ஆம் தரம் வரை தங்களது மேலதிக கல்வியினை தொடர்வதற்கு 5 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கும் நடைபாதையாக சென்று தங்களது கல்வி நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இப்பபடசாலைகள் நாவலடி – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளதோடு, கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ள செல்லும் மாணவர்கள் பிரதான வீதியினால் செல்லும்போது பல வாகன விபத்துக்களில் சிக்குவதாலும், மிகவும் வறுமையின்கீழ் தங்களது குடும்ப வாழ்க்கையினை வாழ்ந்துவரும் இம்மக்கள் தங்களது பிள்ளைகளும் கல்வியினை கற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாடசாலைக்கு அனுப்புவதற்குக்கூட வாகன போக்குவரத்திற்கு வசதியற்றவர்களாக தங்களது வாழ்க்கையினை நடாத்தி வருகின்றமை மிகவும் வேதனைக்குரியதோர் விடயமாக இருப்பதோடு, இவ்விடயத்தில் தாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி இக்கிராமங்களை உள்ளடக்கியதாக ஒரு பாடசாலை ஒன்றினை பெற்றுத்தர வேண்டுமென்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் தக்வா பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர்.

மேலும் இங்குள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கும், கஸ்டத்திற்கும் மத்தியில் மிகவும் வறுமையின்கீழ் தங்களது குடும்ப வாழ்க்கையினை வாழ்ந்து வருவதோடு, இக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினையும் மேலோங்கச்செய்ய வாழ்வாதார உதவிகளையும் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டனர்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இவ்விரண்டு விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி அதற்குரிய தீர்வினை பெற்றுத்தருவதற்கு தன்னாலான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இந்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறுக், தக்வா நகர் பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் ஹைதர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY