சட்டவிரோதமாக மண் அகழ்ந்து சென்றவர் வாகனத்துடன் கைது

0
277

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மண் அகழ்ந்து சென்ற சாரதியை ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 07, 2016) பிற்பகல் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆட்கள் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மண் அகழ்ந்து செல்லப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து தாங்கள் சோதனையிலீடுபட்டபோது மட்டக்களப்பு ஈச்சந்தீவைச் சேர்ந்த ரிப்பர் வாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி அகழ்ந்து ஏற்றிச் செல்லப்பட்ட மண்ணுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மண் ஏற்றிச் செல்லப்பட்ட ரிப்பர் வாகனம் ஏறாவூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY