பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியில் நடந்து செல்லும் போது விழுந்த இஸ்மாயில் ஹனீபா வபாத்: ஏறாவூரில் சம்பவம்

0
131

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Dead-body-in-morgue-006பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து வீடு நோக்கிச் செல்லும்போது மயங்கி விழுந்தவர் மரணமடைந்து விட்ட சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் ஓடாவியார் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் ஹனீபா (வயது 60) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அலுவல் நிமித்தம் ஏறாவூரிலிருந்து மட்டக்களப்புக்கு சென்று மீண்டும் பஸ்ஸில் ஏறாவூருக்குத் திரும்பியுள்ளார்.

பஸ்ஸிலிருந்து இறங்கியவர் வீதியால் நடந்து வீடு நோக்கிச் செல்லும்போது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY