பொரலஸ்­கமுவ பள்­ளி­வாசல் மீது தாக்­கு­தல் உடை­மை­க­ளுக்கு சேதம் : முஅத்தின் காயம்

0
187

pallivasalthakkuthalபொர­லஸ்­க­முவ ஜும்ஆ பள்­ளி­வாசல் மீது நேற்று முன்­தினம் அதி­காலை 1.15 மணி­ய­ளவில் இனம் தெரி­யா­த­வர்­க­ளினால் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இரண்டு முச்­சக்­கர வண்­டி­களில் வந்­த­வர்­களால் இந்த தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதன் கார­ண­மாக பள்­ளி­வா­சலின் உடை­மை­க­ளுக்கு பாரிய சேதம் ஏற்­பட்­டுள்­ள­துடன் பள்­ளி­வா­சலில் கடமை புரியும் முஅத்­தினும் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்ளார்.

இத் தாக்­குதல் இடம்­பெற்ற செய்­தியை கேள்­வி­யுற்று அங்கு சென்­றி­ருந்த முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அஸாத் சாலி தெரி­விக்­கையில்,
பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட செய்தி கேள்­வி­யுற்­ற­துடன் அங்கு சென்று நிலை­மையை அவ­தா­னித்தேன். பள்­ளி­வா­ச­லுக்கு நுழை­வ­தற்கு 2 நுழை­வா­யில்கள் இருக்­கின்­றன.

இரண்­டையும் உடைத்­துக்­கொண்டு இந்த கும்பல் பள்­ளி­யினுள் நுழைந்து பள்­ளி­வா­சலில் இருந்த பொருட்கள் மீது சேதம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறிப்­பாக பள்­ளி­யினுள் இருந்த மின் விசிறி, கடி­காரம், குர்­ஆன்கள் மற்றும் ஜன்­னல்­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
அத்­துடன் பள்­ளி­வா­ச­லுக்குள் தூங்­கிக்­கொண்­டி­ருந்த முஅத்தின் மீதும் இவர்கள் தாக்­கி­யுள்­ளனர்.

காய­ம­டைந்த அவர் வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சைக்கு பின்னர் வைத்­தி­ய­சா­லையில் இருந்து நேற்று மதியம் வெளி­யே­றி­யுள்ளார்.

இரண்டு முச்­சக்­கர வண்­டி­களில் வந்­துள்ள இந்த கும்­பலில் இரண்­டுபேர் மாத்­திரம் பள்­ளி­வா­ச­லுக்குள் நுழைந்து இவ்­வாறு தாக்­குதல் மேற்­கொண்­டுள்­ளனர்.

சம்­பவம் தொடர்பில் பொர­லஸ்­க­முவ பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளோம். அத்­துடன் பொலிஸ்மா அதி­ப­ருடன் தொடர்­பு­கொண்டு சம்­பவம் தொடர்பில் விளக்­க­ம­ளித்துள்ளோம்.

பொலிஸ்மா அதிபர் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்று மாலை சம்­பவம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

அத்­துடன் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் இருக்கும் 2 நிறு­வ­னங்­களில் பொருத்­தப்­பட்­டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களை பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் குறிப்பிட்ட பாதுகாப்பு கமராக்கள் பரிசோதிக்கப்படவுள்ளன. அதன் பின்னர் குற்றவாளிகளை இனம் கண்டுகொள்ளலாம் என நம்புகின்றோம் என்றார்.

-Virakesari-

LEAVE A REPLY