முஸ்லிம் அமைச்சர்களால் முடியாவிட்டால் நான் குரல் கொடுப்பேன் – மனோ

0
175

Mano ganesanஅஷ்ரப் ஏ சமத்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம் முஸ்லிம் சேவைக்கு ஒரு பணிப்பாளர் நியமிக்கப்படாமல் இருப்பதனையிட்டு நாம் மிகவும் மனவேதனை அடைகின்றேன். இதற்கு முஸ்லிம் அமைச்சர்களால் முடியாவிட்டால் நான் அதற்காக குரல் கொடுத்து அதனை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளராக கடமையாற்றிய எம். இசட். அஹமட் முனவ்வரின் “இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 1950 ஆண்டு இருந்து இன்று வரை” என்ற நுால் வெளியீடும் 25 ஆலிம்களை கௌரவிப்பு நிகழ்வும் நேற்று(07) கொழும்பு பொது நுாலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் விஷேட அதிதிகளாக மலேசியாவின் அஷ்-ஷெய்க் மௌலானா முஹமட் அப்துல் காதிர், சிங்கப்பூரின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளரும், சமூக சேவகரும் வர்த்தக ஆரோசகருமான அல்-ஹாஜ் எம். ஷெய்யத் ஜஹர்ங்கிர், தமிழ் நாடு ஹாஜரா நிறுவனத்தின் றஹ்மதுல்லா ஆலிம் இப்னு சம்சுடீன் ஆலிம் அமைச்சர்களான மனோ கணேசன், பைசர் முஸ்தபா, றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோருடன் பல கல்விமான்கள், புத்தி ஜீவிகள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவா் தொடா்ந்து உரையாற்றுகையில்:

இங்கு உரையாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளா் என். எம் அமீன் கண்னீா் மல்க ஆற்றிய உரையில் “கடந்த நோன்பு மாதத்திற்கு மட்டும் முஸ்லிம் சேவையில் 3 கோடி ரூபாவை விளம்பரமாக முஸ்லிம் வா்த்தகா்கள் கொடுத்துள்ளனர்.

ஆனால் பகலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், அலவி மொளலான போன்றோர்கள் இலங்கை வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சியயை இந்த அளவுக்கு கொண்டு வந்தனர். அந்த சேவையில் தற்பொழுது 10 முஸ்லிம் அதிகாரிகள் கூட இல்லை.

அஹமட் முனவ்வர் ஓய்வு பெற்றத்திற்குப் பிறகு இங்கு இதுவரை முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை எனக் கூறினார். தற்போதைய எஸ்.எம் ஹனிபா பதில் கடமையே ஆற்றி வருகின்றார். இந்த அளவுக்கு முஸ்லிம்களுடைய ஊடகம் மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் உள்ளதாக மிகவும் ஆதங்கமாக தெரிவித்தார்.

நான் மொழி, இனம், ஜக்கியம் சம்பந்தமான அமைச்சர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் பதவியை பெற்றுத்தர நான் நடவடிக்கை எடுப்பேன் என அங்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நூலாய்வினை எம்.ஜே.எம். மன்சூர் (நளீமி) வழங்கினார். இதன்போது இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் தமது பங்களிப்புக்களை வழங்கிய சங்கை மிக்க உலமாக்களுக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிளிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY