மட்டக்களப்பு பழைய கல்லடிப்பாலத்தின் நடை பாதையில் ஒருவர் தவறி விழுந்து காயம்

0
42

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

unnamed (3)மட்டக்களப்பு பழைய கல்லடிப்பாலத்தின் நடை பாதையில் இன்று (8.8.2016) ஒருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.நசார்(36) என்பவர் மட்டக்களப்பு பழய கல்லடிப்பாலத்தின் நடை பாதையில் மட்டக்களப்பு பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்த போது உடைந்த அந்தப்பாலத்தின் நடை பாதையில் தவறி வாவியினுள் விழுந்துள்ளார்.

இவர் விழுவதைக்கண்ட கல்லடிப்பாலத்தின் புதிய பாலத்தினால் சென்ற பொது மக்கள் மற்றும் கல்லடி வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சேர்ந்து வாவியினுள் விழுந்த இவரைக்காப்பாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

இதனுள் தவறி விழுந்த மேற்படி நபர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் பழைய பாலத்தின் நடை பாதையின் ஒரு இடத்தில் பாரிய உடைவு காணப்படுவதுடன் இதானல் நடைபாதையில் செல்பவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

unnamed (4)

unnamed (5)

unnamed

LEAVE A REPLY