பாகிஸ்தானுக்கு எதிரான 3–வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

0
92

201608080403133984_England-stage-heroic-comeback-on-day-five-to-win-the-third_SECVPFஇங்கிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 3–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 297 ரன்களும், பாகிஸ்தான் 400 ரன்களும் எடுத்தன.

103 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சை வலுவாக தொடங்கியது. 4–வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு 4 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 445 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 70.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சமி அஸ்லாம் 70 ரன்களும், அசார் அலி 38 ரன்களும், சோகைல் கான் 36 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், ஸ்டீவன் பின், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11–ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.

LEAVE A REPLY