பெண்களுக்கான நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது ஹங்கேரி

0
98

Hungary's Katinka Hosszuபிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடக்கும் 31வது ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான நீச்சல் பிரிவில் ஹங்கேரி தங்கம் வென்றுள்ளது.

பெண்களுக்கான 400 மீட்டர் நீச்சல் போட்டியில் ஹங்கேரியின் கதின்கா ஹோஸ்ஜூ வெற்றி பெற்றுள்ளார். இவர் இப்போட்டியில் தங்க பதக்கம் வென்றதுடன், மிக குறுகிய நேரத்தில் இலக்கை அடைந்தவர் என்ற புதிய உலக சாதனையையும் நிகழ்த்தி உள்ளார்.

இவர் 4 நிமிடம் 26.36 விநாடிகளில் இலக்கை அடைந்துள்ளார். இவர் ஒலிம்பிக்கின் நீச்சல் தனிப்பிரிவில் தங்கம் வெல்வது இது 4வது முறையாகும்.

இப்போட்டியில் அ அமெரிக்க வீராங்கனை மாயா டிராடோ 4 நிமிடம் 31.15 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஸ்பெயின் நாட்டின் மரியா பில்மோனேட் 4 நிமிடம் 32.39 விநாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடம் பெற்றார்.

LEAVE A REPLY