மேசிடோனியா நாட்டில் பெரும் வெள்ளம்: 15 பேர் பலி; 6 பேரை காணவில்லை

0
197

201608071657229222_At-least-15-dead-in-Macedonian-flash-floods_SECVPFமேசிடோனியா நாட்டின் தலைநகர் ஸ்கோப்ஜே நகரில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 15 பேர் வரை பலியாகியுள்ளனர். 6 பேரை காணவில்லை என போலீசார் இன்று கூறியுள்ளனர்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மேசிடோனியா நாட்டின் தலைநகர் ஸ்கோப்ஜே. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் அந்நகரில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்நகரை சுற்றியுள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. கார்கள் நீருக்குள் மூழ்கியுள்ளன.

சில புறநகர் பகுதிகள் கடும் பாதிப்பில் உள்ளன. இன்று காலை மழை பெய்வது நின்றுள்ளது. ஆனால் இன்று மாலை மழை பெய்ய கூடும் என வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர், பல பேர் இங்கு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது வருத்தம் அளிக்கிறது என கூறியதுடன், அவர்களை பற்றிய முழுமையான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY