தாய்லாந்தில் புதிய அரசியல் சாசன அறிமுகம்: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நிறைவு

0
92

160807010243_thail_2962875gபுதிய அரசியல் சாசனத்தை அறிமுகம் செய்வது தொடர்பாக தாய்லாந்தில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவடைந்துள்ளது.

இதனை அறிமுகப்படுத்துவது வெற்றியடைந்தால், தாய்லாந்து அரசியலில் ராணுவத்தின் நிலை வலுப்படுத்தப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளை விட மேலான அதிகாரத்தை நியமிக்கப்படுகின்ற அதிகாரிகளுக்கு வழங்குவதாக அவர்கள் தெரிவிக்கும் இந்த அரசியில் சாசனத்தின் கொள்கைகளை மனித உரிமை குழுக்கள் விமர்சனம் செய்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியை கைப்பற்றிய தாய்லாந்து ராணுவம், மக்கள் இதற்கு ஆதரவாக வாக்களிக்க ஊக்கமூட்டியுள்ளது.

ஆனால், இந்த அரசியல் சாசனத்திற்கு எதிராக பரப்புரை மேற்கொள்வதை அது தடை செய்திருக்கிறது.

இன்னும் சில மணிநேரங்களில் ஆரம்ப முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY