தொழில்நுட்ப கோளாறால் அல்ஜீரியா விமானம் தரையிறக்கம்

0
88

201608071055087884_plane-lands-safely-in-Algeria-after-technical-failure_SECVPFஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் அல்ஜியர்ஸ் நகரில் இருந்து மார்செய்லே என்ற இடத்துக்கு போயிங் 737-600 ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.

அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிறுவனத்தின் “ரேடார்” கட்டுப்பாட்டில் இருந்து அந்த விமானம் திடீரென மாயமானது.

இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த விமானம் எங்கோ விழுந்து நொறுங்கி விபத்துக் குள்ளானதாக கருதப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அது விபத்துக்குள்ளாகவில்லை என அறிவிக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் மீண்டும் அல்ஜியர்ஸ் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

LEAVE A REPLY