மட்டக்களப்பில் நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வுகள் இந்த வாரம் ஆரம்பம்

0
243

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

3d small people - session behind a round table prஇனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வுகள் மட்டக்களப்பில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் (ஓகஸ்ட் 09, 2016) ஆரம்பமாகவுள்ளதாக நல்லிணக்கத்திற்கான பொதுமக்களின் கருத்தறியும் செயலணிக்குழு  அறிவித்துள்ளது.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அமர்வு செவ்வாய்க்கிழமை  வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 8:30 மணியிலிருந்து மாலை 4:30 மணிவரை இடம்பெறவுள்ளது.

செயலணிக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாவது அமர்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9:30 தொடக்கம் மாலை 4:30 வரை இடம்பெறும்.

செயலணியின் மூன்றாவது அமர்வு சனிக்கிழமை மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில்  காலை 9:30 தொடக்கம் மாலை 4:30 வரையும் இடம்பெறுகின்ற அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8:30 தொடக்கம் மாலை 4:30 மணிவரை இடம்பெறவுள்ளது.

இந்த அமர்வுகள் தொடர்பான மேலதிக விவரங்களை செயலணிக்குழுவின் 0114232857 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும். இனப்பிரச்சினைக்கான தீர்வில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கப் பொறிமுறைக்கு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் அக்கறை காட்டுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சரித்திரபூர்வமான இந்தக் கருத்தறியும் பொறிமுறை வடிவமைப்பு ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்று செயலணி அறிவித்துள்ளது. சட்டத்துறை நிபுணரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பலவற்றின் முன்னாள் ஆணையாளருமான மனோரி முத்தட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட செயலணி இந்த நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களின் கருத்தறியும் அமர்வுகளை நாடெங்கிலும் நடாத்தி வருகின்றது.

இந்த செயலணியில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அதன் செயலாளராகக் கடமையாற்றுகின்ற அதேவேளை காமினி வியாங்கொட ஏலையபெழனய விஷாகா தர்மதாஸ ஏளையமய னூயசஅயனயளயஇ சாந்தா அபிமன்னசிங்கம்  பேராசிரியை சித்திரலேகா மௌனகு கே.டபிள்யூ ஜனரஞ்சன மு. று. துயயெசயதெயயெ, பேராசிரியர் தயா சோமசுந்தரம், கலாநிதி பர்ஸானா ஹனீபா னுச. குயசணயயெ, பேராசிரியர் கமீலா சமரசிங்ஹ மற்றும் மிராக் றஹீம்  ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாகக் கடமையாற்றுகின்றனர். அதன் நாடளாவிய வலய மட்ட செயலணிக் குழுவில் 92 பேர் அங்கத்தவர்களாக உள்ளார்கள்.

LEAVE A REPLY