மருத்துவ அறிவுபற்றி தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம்

0
121

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamedஇலங்கை வைத்திய நிபுணர்கள் கல்லூரி, இலங்கை இருதயச் சங்கம் மற்றும் மட்டக்களப்பு வைத்தியச் சங்கம் என்பன இணைந்து சுகாதாரத் துறையினருக்கு மருத்துவ அறிவுபற்றி தெளிவூட்டும் இருநாள் நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பில் சனிக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வார இறுதித் தினங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை வைத்திய நிபுணர்கள் கல்லூரியின் தலைவர் வைத்தியக் கலாநிதி நிஹால் குணதிலக, மட்டக்களப்பு வைத்தியச் சங்கத்தின் தலைவி வைத்தியக் கலாநிதி சித்திரா வாமதேவன் உட்பட கிழக்கு மாகாண வைத்தியர்கள், மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள், கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் தாதியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை வைத்திய நிபுணர்கள் கல்லூரியின் 6 ஆவது வருடாந்த சம்மேளனத்தின் முன்நிகழ்வாக இது இடம்பெற்றது.

புதிய மருத்துவ ஆராய்ச்சி முறைகள், புதிய கண்டு பிடிப்புக்கள், புதிய ஆய்வுகள், நவீன முறைகள் மற்றும் உபகரணங்கள் கையாளுகை பற்றியும் இந்நிகழ்வில் தெளிவூட்டப்பட்டன. நிகழ்வில் மட்டக்களப்பு வைத்தியச் சங்கத்தின் தலைவி வைத்தியக் கலாநிதி சித்திரா வாமதேவனுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY