(Poem) நட்பு

0
19

(Mohamed Nizous)

நட்பிலே பல வகைகள்
நடப்பிலே உள்ளன
உட்புகுந்து ஆராய்ந்தால்
உண்மைகள் புரிய வரும்.

எதிரியின் எதிரியாகி
ஏற்படும் நட்பு
உதிரும் பூப்போல
ஒழியும் சில நாளில்

பயணத்தில் பஸ்ஸில்
பக்கத்து நட்பு
பயனற்றுப் போகும்
படிக்கட்டால் இறங்கிய பின்.

உள்ளே நோக்கத்துடன்
உருவாக்கும் நட்பு
சொல்லாமல் பிரியும்
சொந்த வேலை முடிந்தபின்.

பள்ளி நட்புக்களில்
பத்து பன்னிரெண்டு
உள்ள வரை நீடிக்கும்
உதவிக் கரம் நீட்டும்.

இயக்கத்தில் சேர்ந்து
ஏற்படும் நட்பு
வியக்க வைக்க வளரும்
விரிசலும் அவ்வாறே

பக்கத்து வீட்டாருடன்
பழகிடும் நட்பு
துக்கத்திற்கும் மகிழ்விற்கும்
தொக்கி நிற்கும் இடையிலே

ஆண் பெண் நட்பு
தேன் போல் இனித்தாலும்
எல்லைகளைத் தாண்டி
தொல்லையிலே முடியலாம்.

உற்றார் உறவினர்கள்
உதிரத்தில் கலந்தோருடன்
நட்பாய்ப் பழகி
நல்லிணக்கம் கண்டால்
எப்போதும் அந் நட்பு
எல்லோர்க்கும் பயன் தரும்.

LEAVE A REPLY