பள்ளிவாசல் நிர்வாக தெரிவின்போது குழப்பம்: 4 பேர் கைது!

0
138

(அப்துல் சலாம் யாசீம்)

Arrestஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட றத்மலை-வெலங்கவுல்பொத்த பிரிவுகளில் கடமையாற்றிய கிராம சேவையாளரை கடந்த வெள்ளிக் கிழமை (05) தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் சந்தேச நபர்கள் நான்கு பேரை நேற்றிரவு (06) கைது செய்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹொரவ்பொத்தானை-யான்ஓயா பகுதியைச்சேர்ந்த ஏ.சீனி முகம்மது (75 வயது) எஸ்.எம்.சுலைமான் (50 வயது) அவரது மனைவியான ஜெமிலா உம்மா (45 வயது) மற்றும் எஸ.றிபாத் (36 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட எஸ்.எம்.சுலைமான் என்பவருடைய மகன் அபூ சாஹித் என்பவரை தாக்கியதாக எஸ.எம்.முனாபீர் என்பவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த வௌ்ளிக்கிழமை பள்ளி வாசலில் நிர்வாகத்தெரிவின் போது இரு குழுக்கழுக்கிடையே மோதல் இடம் பெற்றுக்ெகாண்டிருந்த போது அக்கிராமத்தில் கடமையாற்றுகின்ற கிராம உத்தியோகத்தர் என்ற வகையில் பினவுகளை தீர்க்க சென்ற போது தாக்கியதாக கிராம உத்தியோகத்தர் சுல்தான் தாசீம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கிராம சேவையாளர் தலையில் காயமேற்பட்ட நிலையில் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY