சுவாதி கொலை: பிலால் மாலிக் உட்பட 6 பேரிடம் ரகசிய வாக்குமூலம் பதிவு

0
184

Swathi-Bilal-Malikநுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பர் பிலால் மாலிக் உட்பட 6 பேரிடம் இன்று ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்போசிஸ் பெண் ஊழியர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சுவாதியின் நண்பரும், இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளுக்கு ஆளாகியிருப்பவருமான பிலால் மாலிக் மற்றும் சுவாதியின் தோழி உட்பட 6 பேரிடம் இன்று ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.

சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்பு 6 பேரது ரகசிய வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு தரப்பு சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அறிக்கையை, நீதிபதி பிரகாஷ், எழும்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைப்பார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY