தெல்தெனிய, ஹிஜ்ராபுர முஸ்லிம் மகா வித்தியாலய வாசிக்க சாலை கட்டடம் திறப்பு

0
138

unnamed (2)(சபீக் ஹுசைன்)

கண்டி மாவட்டம், தெல்தெனிய, ஹிஜ்ராபுர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியால் கட்டப்பட்ட வாசிகசாலை கட்டத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (6) திறந்துவைத்தார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுத்துள்ள ”வீட்டுக்கு வீடு மரம்” செயற்திட்டமான ஒவ்வொரு வீட்டுக்கும் மரம் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து கண்டி மாவட்டம், தெல்தனிய அம்பகஹகந்தையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பண நிகழ்வு தெல்தெனிய அமைப்பாளரும், முன்னாள் மெததும்பர பிரதேச சபை உறுப்பினறுமான பாஸிலின் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதில் அம்பகஹகந்த பள்ளிவாசல் தலைவர் பாருக், உப தலைவர் மௌலவி ரம்ஸான், இளைஞர் காங்கிரஸ் தலைவர் நஸாஜி, அமைப்பாளர் ருஸ்தீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காதர் நிஜாம், உட்பட இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY