முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு 11-ந்தேதி ஆபரேஷன்: கிரிக்கெட்டிற்கு 6 மாதம் ஓய்வு

0
151

201608061609432412_Mustafizur-to-undergo-shoulder-surgery-on-August-11_SECVPFவங்காள தேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முஸ்டாபிஜூர் ரஹ்மான். 20 வயதாகும் இவர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வங்காள தேச அணியை கடந்த ஒரு வருடமாக தலைநிமிரச் செய்ததில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.

இவரது திறமையை அறிந்து ஐ.பி.எல். மற்றும் இங்கிலாந்து கவுண்டி அணிகள் இவரை ஒப்பந்தம் செய்தது. இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக முடித்து, இங்கிலாந்தின் சசக்ஸ் அணிக்காக விளையாட இங்கிலாந்து சென்றார்.

அந்த அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடிய அவருக்கு, இடது கை தோள்பட்டையில் காயம் காரணமாக வலி ஏற்பட்டது. இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியப்படுத்தினார்கள். அவர்கள் மருத்துவ வல்லுனர்களை வைத்து முஸ்டாபிஜூர் ரஹ்மான் காயம் குறித்து ஆராய்ந்தனர்.

அப்போது அவருக்கு தோள்பட்டையில் உள்ள சவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக சிறந்த டாக்டரை வங்காள தேசம் தேடியது. மேலும், ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளில் ஒன்றில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வருகிற 11-ந்தேதி லண்டனில் முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. லண்டனில் உள்ள போர்ட்டியஸ் கிளினிக்கில் ஆண்ட்ரிவ் வாலஸ் என்ற டாக்டர் அவருக்கு ஆபரேஷன் செய்ய உள்ளார். இதனால் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 6 மாத காலம் ஓய்வு எடுக்க இருக்கிறார்.

இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் மீடியா கமிட்டி டைரக்டர் ஜலால் யூனுஸ் கூறுகையில் ‘‘லண்டனில் 11-ந்தேதி முஸ்டாபிஜூருக்கு ஆபரேஷன் நடைபெற இருக்கிறது. நேற்று டாக்டர் வாலஸை சந்தித்தார். அப்போது இந்த தேதியை அவர் ஒதுக்கி கொடுத்துள்ளார். ஆபரேசன் முடிவடைந்து நல்ல முறையில் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என்றார்.

LEAVE A REPLY