ரஸலின் சாதனையை நாளைய போட்டியில் முறியடிப்பேன்- கெய்ல்

0
110

201608061811242498_Chris-Gayle-wants-to-take-back-the-fastest-CPL-century_SECVPFவெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2-ல் பிராவோ தலைமயிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் மோதின.

இதில் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா அணியில் இடம்பிடித்துள்ள ஆன்ட்ரே ரஸல் 44 பந்தில் 3 பவுண்டரி, 11 சிக்சர்களுடன் 100 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் ஜமைக்கா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஸல் அதிரடி குறித்து அணியின் கேப்டன் கிறிஸ் கூறுகையில் ‘‘ரஸல் எங்கள் அணியின் சிறந்த வீரர். அவருடைய இந்த சதம் அற்புதமானது. ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடக்கும் இறுதிப்போட்டியில் கயானா அணிக்கெதிராக நான் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் அதிவேக சதமாக ரஸலின் சாதனையை முறியடிப்பேன்’’ என்றார்.

கிறிஸ் கெய்ல் தனது சபதத்தை நிறைவேற்றுவாரா? என்பது நாளை நடக்கும் இறுதிப் போட்டியின் போது தெரிய வரும்.

LEAVE A REPLY