சிரியாவில் ஒரு வாரத்தில் 500 பேர் பலி

0
94

201608062217485765_Over-500-fighters-killed-in-a-week-in-Aleppo-battle-monitor_SECVPFசிரியாவில் அதிபர் ஆசாத்தின் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சிப் படைகளுக்குமிடையிலான உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்துள்ளது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா வான் தாக்குதல்கள் நடத்தி வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொன்று குவிக்கப்படுகின்றனர். உள்நாட்டுச் சண்டையில் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது முக்கிய வர்த்தக நகரமான அலெப்போவை முழுமையாகக் கைப்பற்றுவதில் இரு தரப்புக்குமிடையே கடந்த ஒரு வார காலமாக தாக்குதல் நடந்துவருகிறது. சண்டையை நிறுத்த ரஷ்யாவும், அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், இரு தரப்பிலும் உயிர்ப்பலி அதிகரிக்கிறது.

அவ்வகையில், ஜூலை 31-ம் தேதி முதல் ஒரு வாரமாக நடைபெற்ற தாக்குதல்களில் இருதரப்பிலும் சேர்த்து 500-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் விமான தாக்குதலில் ஏராளமான கிளர்ச்சிப் படை மற்றும் ஜிகாதிக்கள் பலர் இறந்துள்ளனர். அதேபோல் அரசுப்படை வசம் உள்ள மாவட்டங்களில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய தாக்குதலில் 130 பொதுமக்கள் இறந்திருப்பதாகவும் கண்காணிப்பக தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறுகிறார். ரஷ்ய விமானப்படை ஆதரவு இருந்தபோதிலும் அரசுப் படைகள் முன்னேறிச் செல்வதில் கடும் சவால் உள்ளது. இந்த சண்டையில் வெற்றி பெறும் தரப்பு அலெப்போவை கைப்பற்றும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY