மதுபான விடுதி தீயில் கருகி 13 பேர் பலி

0
111

201608061559044077_A-fire-at-a-birthday-party-in-France-bar-could-have-been-the_SECVPFபிரான்ஸ் நாட்டின் ரென்னெஸ் நகரில் மதுபான விடுதியில் இன்று நிகழ்ந்த தீவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.

பிரான்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள பிரிட்டனி மாகாணத்தின் தலைநகரான ரென்னெஸ் நகரின் ரோவென் பகுதியில் உள்ள பிரபல மதுபான விடுதியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் உள்துறை மந்திரி பெர்னார்ட் காஸேனியூவே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தீ விபத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது. பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக கொண்டு வரப்பட்ட கேக் கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக இச்சம்பத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

கேக் கீழே விழுந்தததில் அதில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியும் கீழே விழுந்து திரைச்சீலை மற்றும் அதன் அருகில் இருந்த பொருட்களில் பட்டு பரவியதில் மதுபான விடுதி முழுவதும் எரிந்ததால் 13 பேர் உயிரிந்ததாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY