வாழைச்சேனை மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகம், பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான கலந்துரையாடல்

0
114

(வாழைச்சேனை நிருபர்)

unnamedவாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் மற்றும் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன், புணாணை 23வது படையணியின் இராணுவ அதிகாரி லெட்டினன்ட் கேணல் அமுனுகம, உதவிப் பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி, சமூக சேவை உத்தியோகத்தர்களான எஸ்.செல்வநாயகம், அ.நஜீம், க.ஜெகதீஸ்வரன், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர். சி.பரமானந்தம் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள், செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நடைபெற்ற கலந்துரையாடலில் அமையப்பெறவுள்ள நிலையமானது ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகம், புனர்வாழ்வு நிலையம், இயன்மருத்துவ பிரிவு, நீச்சல் தடாகம், ஜிம் சென்டர், மினி தியேட்டர் உட்பட மேலும் பல வசதிகள் உள்ளடங்கலாக இக் கட்டிடம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டடம் அமையவுள்ள காணி அடையாளம் காணப்பட்டுள்ளது. பகுதி பகுதியாக நடைபெறவுள்ள இவ் வேலைகள் வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகின்றது.

23வது படையணியின் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சியின் முயற்சியின் பயனாகவே குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY