(Poem) சண்டை

0
17

(நிஷவ்ஸ்)

அக்கால மக்களுக்கு
அவ்வளவு அறிவு இல்லை
பக்கத்துக் கோழியொன்று
பாயினை அசிங்கமாக்க
சந்தியிலே வந்து நின்று
சாரணை உயர்த்திக் கட்டி
வந்த வார்த்தையெல்லாம்
வாயினால் கொட்டுவார்கள்
கோழிச் சொந்தக்காரன்
கொதித்தெழுவான் அப்புறம்
ஏழெட்டு சொல் இருக்கு.
இருவரும் மாறி மாறி
அதனையே கூறுவார்
அதை இங்கு எழுத ஏலா.
இக்காலம் என்பது
இலக்ட்ரோணிக் காலம்.
அக்காலம் போல
அடுத்த வீட்டில் கோழி இல்லை
உயர்த்தச் சாரண் இல்லை
உடுக்கிறார் 11
சந்தியில் வாகனங்கள்
சத்தம் போட்டா கேட்காது.
ஆனாலும் ஆனாலும்
அடிப்படை மாறவில்லை.
போணிலே சில ஆட்கள்
போடுகிற ஸ்டேட்ஸ் பார்த்தா
கோழிச் சண்டையாளர்
கோடி மடங்கு நல்லவர்கள்.
மார்க்கத்தின் பெயராலும்
மற்றக் கொள்கை பெயராலும்
மூர்க்கத்துடன் எழுதுகிற
முக நூல் போஸ்ட் காண
கூசுகிறது மனங்கள்.
கூவமாய் நாற்றங்கள்.
மோசமான வார்த்தைகள்
மொக்குத் தன வாதங்கள்
ஆன்மாவை சோதிக்கும்
அபத்த தர்க்கங்கள்.
ஏன்தான் இவர்கள்
இப்படி நடக்கின்றார்?
கோழிச் சண்டைகள்
கொஞ்ச நேரந்தான் -முக
நூலின் சண்டைகள்
முடியுமா தெரியவில்லை

LEAVE A REPLY