தர்கா நகரில் பதற்றம்; STF பாதுகாப்பு: இருவர் கைது

0
108

13898395_1043717102344917_1721365158_oதர்கா நகரில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அங்கு விஷேட அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புகை விசுறும் போது, அப்புகை தனது ஹோட்டலின் உள்ளே சென்று, கடையில் காணப்படும் உணவுகள் பழுதடைந்ததாகத் தெரிவித்து ஹோட்டல் உரிமையாளர் சுகாதார கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர் ஆகியோரை கடைக்குள் வைத்து அடைத்துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் வருகைதந்து அவ்விருவரையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்ற நிலை எற்பட்டுள்ளதாக்க பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னறிவித்தல் எதுவும் இல்லாமல் வந்து புகை விசிரியதால் தனது ஹோட்டலில் காணப்பட்ட அனைத்து உணவுகளும் பழுதடைந்துள்ளதாக கடை உரிமையாளர் குற்றம்ச சுமத்தியுள்ளார்.

குறித்த சுகாதார கண்காணிப்பாளர்கள் மதுபானம் அருந்திவிட்டு வந்து இவ்வாறு நடந்து கொண்டதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து தற்போழுது நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த ஹோட்டல் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவருகின்றது.

#ET

13902204_1043716962344931_1782656884_o-768x432 13978085_1043717099011584_336331769_o-768x432

LEAVE A REPLY