(Photos) காத்தான்குடி இ.போ.ச. பஸ் கலேவலயில் விபத்து

0
89

(விஷேட நிருபர்)

13920929_1179580388729408_5143558868612391652_nகாத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டி இன்று (06) அதிகாலை தம்புள்ள கலேவல பிரசேத்தில் வைத்து விபத்துக்குள்ளானதில் சிலர் சிறிய காயங்களுக்குள்ளானார்கள்.

காத்தான்குடி டிப்போவுக்கு சொந்தமான இந்த பஸ் வண்டி காத்தான்குடியிலிருந்து நேற்றிரவு 10.00 மணிக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்த போது இன்று அதிகாலை கலேவல பிரதானவீதியிலுள்ள சில்லறைக்கடையொன்றில் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கலேவல பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

13906704_1179580148729432_5224670900048552911_n 13872964_1179580378729409_2647287415685065120

LEAVE A REPLY