பள்ளிவாசல் நிர்வாக தெரிவின்போது குழப்பம்: கிராம உத்தியோகத்தர் முகம்மட் தாசீம் வைத்தியசாலையில்

0
254

(அப்துல் சலாம் யாசீம்)

Mohamed Thaseem GSஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட றத்மலை -வெலங்கவுல்பொத்த பிரிவில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தர் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் நேற்றுமாலை (05) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் ஹொரவ்பொத்தானை-யான்ஓயா பகுதியைச்சேர்ந்த சுல்தான் முகம்மட் தாசீம் (33 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

யான்ஓயா பள்ளி வாசலில் நிர்வாக தெரிவின் போது இரு குழுக்களுக்கிடையில் பிரச்சிணை இடம் பெற்று அது மோதலாக மாறிய போது அக்கிராமத்தில் கடமையாற்றுகின்ற கிராம சேவையாளர் என்றடிப்படையில் பிழவுகளை தீர்த்து வைக்க முற்பட்டபோது ஒரு குழுவைச்சேர்ந்தவர் தாக்குதல் நடாத்தியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான கிராம உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொறவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY