முஸ்­லிம்­கள் மது­பானம் பாவிப்­ப­தில்லை; அது வர­வேற்­கத்­தக்க விட­யம்: அமைச்சர் ராஜித சேனா­ரத்ன

0
29

1397292443rajithமுஸ்­லிம்­களின் உணவு தொடர்பில் கடந்த காலங்­களில் சில தரப்­பினர் விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தினர். அதனை ஹலால் பிரச்­சி­னை­யாகக் கொண்டு வந்­தனர். எனினும் முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால், ஹராம் என்­கின்ற இரு விட­யங்கள் உள்­ளன.

ஹலா­லா­ன­வற்றை உண்­ப­தற்கே அவர்­க­ளுக்கு சம­யத்தில் அனு­ம­தி­யுண்டு. இஸ்லாம் சம­யத்­தின்­படி மது­பானம் அருந்­து­வது ஹரா­மாக்­கப்­பட்­டுள்­ளது.

அதனால் அவர்கள் மது­பானம் பாவிப்­ப­தில்லை. அது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

‘மது­சா­ர­மற்ற இலங்கை’ எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான தேசிய மாநாடு நேற்று காலை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
முஸ்­லிம்­களில் மிகவும் சிறி­ய­ள­வி­லான தொகை­யி­னரே மது­பானம் அருந்­து­கின்­றனர். ஏனை­ய­வர்­களைப் போல் அவர்­களும் மது­பானம் அருந்­து­வார்­க­ளாயின் இலங்கை அப்­பா­வ­னையில் தற்­போ­துள்­ளதை விட மோச­மான நிலை­யினை அடைய வேண்­டி­வரும்.

எனது பிர­தேச சனத் தொகையில் 31 சத­வீதம் முஸ்­லிம்கள் வசிக்­கின்றர். அவர்­களின் வீடு­க­ளுக்கு நான் அடிக்­கடி செல்­கின்றேன்.

அவர்கள் உணவு பரி­மா­றும்­போது ஒரு­போதும் மது­பானம் பரி­மா­றி­ய­தில்லை. அத­னை­யொட்டி நாம் சந்­தே­மா­ஷ­ம­டைய வேண்டும்.

மேலும் புகைத்தல் பாவ­னை­யினை தடுப்­ப­தனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு புகை­யிலை கூட்­டுத்­தா­ப­னங்­களின் வரி 90சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அந்த வரு­மா­னத்தைக் கொண்டு சுகா­தா­ரத்­து­றை­யி­லுள்ள சகல வற் வரி­யி­னையும் நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை நானும் ஜனா­தி­ப­தியும் இணைந்து அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­க­வுள்ளோம்.

புகை­யிலை கூட்டுத் தாப­னங்­க­ளுக்­கான வரி அதி­க­ரிப்பு தொடர்பில் பேச்சு வார்த்­தைக்கு வரு­மாறு அக்­கூட்­டுத்­தா­ப­னங்கள் எனக்கு அழைப்பு விடுத்­தன.

எனினும் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டிய அவ­சியம் இல்லை. முன்னாள் சுகா­தா­ரத்­துறை அமைச்சர் பேச்சுவார்­த­்தை­களை நிறை­வு­செய்து விட்டார். நான் அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய தேவை மாத்­திரம் உள்­ள­தாக அவர்­க­ளிடம் தெரி­வித்தேன்.

புகை­யிலை கூட்டுத்தாபனங்­களின் வரி அதி­க­ரிப்பு தொடர்பில் எவ­ரு­டனும் பேச்­சு­வார்­த்தை நடத்த வேண்­டிய அவ­சியம் எனக்­கில்லை.

புகை­யி­லைக்­கான வரி அதி­க­ரிப்பின் மூலம் கிடைக்ரும் வரு­மா­னத்தை விட புகைத்தல் பாவ­னை­யினால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் சிகிச்­சைக்கு அதி­க­ள­வான நிதி­யினை செல­விட வேண்­டி­யுள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் ஆட்சி காலத்­திலும் புகை­யிலைக் கூட்­டுத்­தா­ப­னங்­களின் வரி 90சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் ஒவ்­வொரு முறையும் புகை­யி­லைக்­கான வரி அதி­க­ரிக்­க­ப்படும் போது புகைத்தல் பாவனை 4.5 சத­வீ­தத்­ததால் குறை­வ­டை­கி­றது.

எனவே புகை­யி­லைக்­கூட்டுத் தாப­னங்­களின் வரி அதி­க­ரிப்பு தொடர்­பி­லான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை எதிர்­வரும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து முன்­வைக்­க­வுள்ளேன்.

மேலும் புகைத்தல் பாவ­னை­யினை தடுப்­ப­தற்­காக அவுஸ்­தி­ரே­லியா ‘ப்லேங் பெகேஜ்’ எனும் திட்டம் ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அதன் மூலம் பெட்­டி­களில் பெயர் மாத்­திரம் பொறிக்க முடியும்.

அது தவிர வேறு கவர்ச்சி விட­யங்கள் எதுவும் பொறிக்க முடி­யாது.
எனவே எதிர்­வரும் அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் ‘ப்லேங் பெகேஜ்’ திட்­டத்­திற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­தையும் சமர்ப்­பிக்­க­வுள்ளேன்.

அத்­துடன் 2020 ஆம் ஆண்­ட­ளவில் புகை­யிலை உற்­பத்­தி­யினை முழு­மை­யாக தடுப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­பார்த்­துள்ளார்.

எனவே எமது நாட்டில் புகைத்தல் மற்றும் மது­சா­ரத்­திற்கு எதி­ராக பல்­வேறு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. புகைத்தல் மற்றும் மது­சார பாவ­னைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் சபையின் இவ்வருட அமர்வின் போது, புகைத்தல் மற்றும் மதுசாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முன்னணி நாடுகள் 8 ஐக் குறிப்பிட்டனர்.

மேலும் நாம் எதிர்காலத்தில் அது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை முன்வைத்தபோது, அதனை நடைமுறைப்படுத்தினால் மதுசாரம் மற்றும் புகைத்தல் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை இலங்கை பெறும் எனக் குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#Vidivelli

LEAVE A REPLY