காத்தான்குடி முஹ்சீன் மௌலானா வீதி கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் புனரமைப்பு

0
192

(M.T. ஹைதர் அலி)

DSC_1964காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள முஹ்சீன் மௌலானா வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேட்கொள்ளபட்டு வருகின்றன.

இவ்வீதியானது பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக கொங்றீட் கற்கள் நிறைந்து காணப்படுகின்றது.

மேலும் இப்பகுதியில் பாடசாலை செல்லும் அதிக மாணவர்கள் பயன்படுத்தும் இவ்வீதியானது மிகவும் தூசு நிறைந்து காணப்படுவதன் காரணமாக மாணவர்கள், சிறார்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பல்வேறு சுவாச நோய்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.

இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொது மக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வீதியானது உள்வாங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அமல்ப்டுபத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்டு வருவதோடு, இத்திட்டத்திற்காக ஏழு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் நிதியொதிக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதி இடப்பட இருக்கின்றது.

இவ்வீதியானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் உரிய இடத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன் போது இவ்வீதியினுடைய நிலைமைகளை எடுத்துரைத்து, அதற்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார்.

DSC_1959 DSC_1961 DSC_1966 DSC_1969

LEAVE A REPLY