சம்பூரில் சட்ட விரோத மீன்பிடி: 3 படகுகளும், 10 மீனவர்களும் கைது!

0
125

(அப்துல் சலாம் யாசீம்)

Arrestதிருகோணமலை-சம்பூர் பிரதேசத்தில் சட்ட விரோதமான மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் 10 பேரையும் 03 படகுகளையும் நேற்றிரவு (05) கடற்படையினர் கைது செய்து துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து சட்ட விரோதமான வலைகளும்-மீன்களும் கைப்பற்றப்பட்டதுடன் 03 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 10 மீனவர்களையும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY