காஷ்மீரில் ஜும்ஆ தொழுகையின் பின் ஏற்பட்ட மோதலில் மூவர் உயிரிழப்பு, 150 பேர் காயம்

0
144

201608052105120371_Three-killed-150-injured-in-Kashmir-clashes_SECVPFகாஷ்மீரில் இன்று (05) வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து ஏற்பட்ட மோதலில் மூவர் உயிரிழந்தனர். 150 பேர் காயம் அடைந்தனர்.

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விரிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் இயல்பு நிலையானது தொடர்ச்சியாக 28-வது நாளாக பாதிக்கப்பட்டு உள்ளது.

ஜுலை 8-ம் தேதி போராளி பர்கான் வானி கொல்லப்பட்டதில் இருந்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 53 பேர் பலியாகி உள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்ததில் மூவர் உயிரிழந்தனர். 150 பேர் காயம் அடைந்தனர்.

நவ்காம் பகுதியில் தொழுகை முடிந்ததும் பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் எடுத்த எதிர் நடவடிக்கையில் முகமது முக்பால் காண்டே உயிரிழந்தார் என்று போலீஸ் தெரிவித்து உள்ளது.

முகமது முக்பால் உயிரிழந்த சம்பவம் பரவியதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. குரால்போரா பகுதியில் மோதல் வெடித்தது என்று போலீஸ் அதிகாரி கூறிஉள்ளார்.

பத்காம் மாவட்டம் கான்சாகிப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் எடுத்த எதிர்நடவடிக்கையில் மூன்று பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக எஸ்.எம்.எச்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட வழியிலே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. பிற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாலிபர் இறந்த விவகாரம் மருத்துவமனை அருகே போராட்டத்திற்கு வழிவகை செய்தது. அப்போதும் பாதுகாப்பு படையினர், போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சோபூரில் நடைபெற்ற மோதலிலும் வலிபர் ஒருவர் உயிரிந்தார் என்று போலீஸ் அதிகாரி கூறிஉள்ளார்.

பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய வன்முறையாளர்கள் காவல் நிலையம் மற்றும் பாதுகாவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஸ்ரீநகரில் மாநில சுகாதாரத் துறை மந்திரி ஆசியா நாகாஸ் வீட்டில் கற்கள் வீசப்பட்டது. வீட்டில் ஆள் இல்லாத காரணத்தினால் யாரும் காயம் அடையவில்லை. கான்சாகி பகுதியில் மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ. மொகத் யாசீன் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் யாரும் காயம் அடையவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மோதல் சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர், அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று கூறிவிட்டனர். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

#Dailythanthi

LEAVE A REPLY