காரைத்தீவில் கணவரால் மனைவி எரியூட்டிக் கொலை

0
135

fire-720x480சம்மாந்துறை – காரைத்தீவு, ஆலயடி வீதி பகுதியில் கணவரால் மனைவி எரியூட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

கொலைச்சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த தம்பதியினர் கடந்த நான்கு மாதங்களின் முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்துள்ள 30 வயதான பெண்ணின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்மாந்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#News1st

LEAVE A REPLY