அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் பெருமையை பீட்டர்சனிடம் இருந்து பறித்தார் குக்

0
108

201608052227210070_Alastair-Cook-goes-past-Kevin-Pietersen-as-England-highest_SECVPFஇங்கிலாந்து- பாகி்ஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது இன்னிங்சில் அலைஸ்டர் குக் 24 ரன்கள் எடுத்திருக்கும்போது 13780 ரன்கள் எடுத்து அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

குக் 2006 முதல் தற்போது வரை 228 போட்டிகளில் 333 இன்னிங்சில் விளையாடி இந்த ரன்னை எடுத்துள்ளார். இதில் 34 சதம் அடங்கும். இதற்கு முன் கெவின் பீட்டர்சன் 2004 முதல் 2014 வரை 275 போட்டிகளில் 340 இன்னிங்சில் விளையாடி 13779 ரன்கள் குவித்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. தற்போது குக் இதை முறியடித்துள்ளார்.

இயான் பெல் 13331 ரன்களுடன் 3-வது இடத்திலும், கிரகாம் கூச் 13190 ரன்களுடன் 4-வது இடத்திலும், அலெக்ஸ் ஸ்டூவர்ட் 13140 ரன்களுடனும் 5-வது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY