ஐபோன் 7 குறித்த புதிய தகவல்கள் கசிந்தது

0
161

201608052018514113_iPhone7-Plus-Hands-On-With-Prototype_SECVPFஆப்பிள் ஐபோன் 7 விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஐபோன் 7 பிளஸ் ப்ரோட்டோடைப்பின் வீடியோ ஒன்று யூடிப் தளத்தில் வெளியாகியுள்ளது. அன்பாக்ஸ் தெரப்பி என்ற யூடிப் சேனலில் ஐபோன் 7 பிளஸ் என்ற பெயரில் புரோட்டோடைப் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் காட்டப்படும் ஐபோன் 7 பிளஸில் இரண்டு கேமராக்கள் காணப்படுகின்றது. இதோடு புதிய கேமரா அக்சஸரிகளும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஐபோன் 7 பிளஸ் அளவில், 6எஸ் பிளசை ஒத்திருந்தாலும் நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும்படி ஐபோன் 7 பிளஸ் கருவியில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை.
இதோடு வயர்லெஸ் சார்ஜிங், ஸ்மார்ட் கனெக்டர் போன்றவை ஐபோன் 7-னுடன் வழங்கப்படலாம் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக புளூ மற்றும் பர்புல் நிறங்களை மிக்ஸ் செய்தது போன்ற கலரில் ஐபோன் 7 பிளஸ் உள்ளது. வழக்கம் போல் ஐபோன் 7 இரண்டு வேரியன்டுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 7 விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஐபோன் 7 பிளஸ் ப்ரோட்டோடைப்பின் வீடியோ ஒன்று யூடிப் தளத்தில் வெளியாகியுள்ளது. அன்பாக்ஸ் தெரப்பி என்ற யூடிப் சேனலில் ஐபோன் 7 பிளஸ் என்ற பெயரில் புரோட்டோடைப் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் காட்டப்படும் ஐபோன் 7 பிளஸில் இரண்டு கேமராக்கள் காணப்படுகின்றது. இதோடு புதிய கேமரா அக்சஸரிகளும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஐபோன் 7 பிளஸ் அளவில், 6எஸ் பிளசை ஒத்திருந்தாலும் நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும்படி ஐபோன் 7 பிளஸ் கருவியில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை. இதோடு வயர்லெஸ் சார்ஜிங், ஸ்மார்ட் கனெக்டர் போன்றவை ஐபோன் 7-னுடன் வழங்கப்படலாம் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக புளூ மற்றும் பர்புல் நிறங்களை மிக்ஸ் செய்தது போன்ற கலரில் ஐபோன் 7 பிளஸ் உள்ளது. வழக்கம் போல் ஐபோன் 7 இரண்டு வேரியன்டுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY