விடைப்பெற்றது பிரபல டொரண்ட்ஸ் தேடல் தளம்

0
94

201608052305400798_Torrentz-Shuts-Down-Largest-Torrent-Meta-Search-Engine-Says_SECVPFகிக்ஆஸ் டொரண்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரண்ட்ஸ் தேடல் இணையதளமான டொரண்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துவிட்டது.

கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரண்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டொரண்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் லாக் இன் செய்ய முயல்பவர்களுக்கு “டொரண்ட்ஸ் எப்போதும் உங்களை நேசிக்கும்…சென்று வருகிறேன்” என்ற செய்தி மட்டுமே பதிலாக கிடைக்கிறது.

LEAVE A REPLY