புலமைப்பரிசில் பரீட்சை: 17 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்த வேண்டும்

0
182

Tution private classதரம் 05 மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவுடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அனைத்து பிரத்தியேக வகுப்புகளையும் நிறுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு. எம். என். ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார்.

இவ்வறிவித்தலை மீறி செயற்படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, பரீட்சார்த்திகளுக்கு பிரத்தியேக வகுப்பு, கருத்தரங்கு, விரிவுரை, பயிற்சிப் பட்டறை ஆகியவற்றை முன்னெடுத்தல், பரீட்சைக்கு வரக்கூடியவையென அனுமானிக்கும் கேள்விகள் உள்ளடங்கிய வினா பத்திரங்களை அச்சிட்டு விநியோகித்தல், பரீட்சைக்கு ஒத்த கேள்விப் பத்திரங்களை வழங்குவதாக குறிப்பிட்டு போஸ்டர், கட்அவுட், பெனர், துண்டுப்பிரசுரம், தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நடைபெறும் 21 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

#Thinakaran

LEAVE A REPLY