கிழக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர் நியமனம வயதெல்லையை அதிகரிக்குமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை

0
192

(எம்.ஜே.எம். சஜீத்)

imran Mahroof MPகிழக்கு மாகாண சபையால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமன வயதெல்லையை அதிகரிக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அந்தக் கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

கிழக்கு மாகாண சபையால் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதன் மூலம் பட்டதாரிகள் தொழில்பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகின்றேன். அதற்காக தங்களுக்கும்கிழக்கு மாகாண சபையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர். இவர்களுள் சிலர் 35வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில் வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களால் இந்த நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.

வேறு சில மாகாணங்களில் பட்டதாரி நியமனங்களுக்கான வயதெல்லை 35ஐ விட அதிகமாக இருப்பதால் அது போன்ற ஒரு வாய்ப்பு கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும். இதனால் அவர்களது வாழ்வாதாரம் அதிகரிக்கும் என்று நான் கருதுகின்றேன்.

எனவே, இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வயதெல்லையை 35ஐ விட அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

LEAVE A REPLY