விபத்தில் நீதிமன்ற பதிவாளர் எம்.எஸ்.எம்.நஸீர் படுகாயம்

0
209

(அப்துல் சலாம் யாசீம்)

accident-logoதிருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி வவுனியா குடியியல் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற பதிவாளர் படுகாயமடைந்த நிலையில் இன்று (05) பி.ப. 4.30 மணியளவில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு விபத்தில் படுகாயமடைந்தவர் திருகோணமலை, இல-73, மசூதி வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் (59 வயது) எனவும் தெரியவருகின்றது.

இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து கடமையை முடித்து விட்டு திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளுடன் மாடு மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த பதிவாளரை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY