கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய குடும்பஸ்தர் கைது

0
149

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Eravur Arrestகஞ்சாவுடன் வீதியில் நடமாடிய 28 வயதான குடும்பஸ்தர் ஒருவரை வெள்ளிக்கிழமை (ஒகஸ்ட் 05, 2016) கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த இந்த நபர் ஏறாவூர் மீராகேணி கிராம வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5000 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY