சட்டவிரோதமாகக் கடத்திவரப்பட்ட 21 பசுமாடுகளுடன் மூவர் கைது

0
154

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrestசட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 21 பசுமாடுகளுடன் வியாழக்கிழமை (ஒகஸ்ட் 04, 2016) மாலை ஏறாவூர் ஐயன்கேணியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக மாடுகள் கடத்திவரப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து பொலிஸ் அணியினர் மறைந்திருந்து திடீர் சோதனை மேற்கொண்டபோது இந்த மாடுகள் கைப்பற்றப்பட்டதோடு அவற்றை கடத்தி வந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இந்த மாடுகளை இறைச்சிக்காக அறுக்கும் நோக்குடன் அனுமதிப் பத்திரமின்றி கடத்தி வந்துள்ளனர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்திருப்பதாக தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர்கள் மீது சட்டவிரோதமாக மாடுகள் கடத்தலில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தனர்.

கைதான மூவரும் முறையே 19, 34, மற்றும் 40 வயதுடைய ஏறாவூர், இலுப்படிச்சேனை மற்றும் பன்குடாவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

LEAVE A REPLY