சனத் நிஷாந்தவை கட்சியிலிருந்து நீக்க சு.க தீர்மானம்

0
115

Sanath-Nishantha-mpபுத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றி கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சி மற்றும் கட்சி தலைவரை ஏற்றுக் கொள்வதில்லை என சனத் நிஷாந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இரவு ஐனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற மத்திய செயற்குழுவின் விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அழைப்பு கடிதங்களுக்கு தீ வைத்த குருநாகல் மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை உறுப்பு பதவிகளிலுருந்தும் கட்சியிலிருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சி மற்றும் கட்சி தலைமைத்துவத்தை விமர்சிப்பவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதயாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஐனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY