29 ரஷிய நீச்சல் வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி

0
167

160727092852_russi_2959009hரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ள மொத்தம் 67 ரஷிய நீச்சல் வீரர்களில் 29 பேருக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது.

ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களில் ரஷியாவின் ஒருங்கிணைக்கப்பட்ட நீச்சல் அணியும் மற்றும் ரஷிய பெண்கள் தண்ணீர் பந்தாட்ட அணியும் அடங்கும்.

11 ரஷிய குத்துச்சண்டை வீரர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ரஷிய பளு தூக்குதல் அணி மற்றும் 17 துடுப்பு போடும் வீரர்கள் மீதான தடையை மேல் முறையீட்டின் மூலம் விலக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

நாட்டின் ஊக்க மருந்து மோசடியை தொடர்ந்து, ரஷிய வீரர்கள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமா என்ற முடிவை அந்தந்த விளையாட்டு கூட்டமைப்புகளே எடுத்து கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கேட்டுக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY