ரங்கன ஹேரத் ஹட்-ட்ரிக் சாதனை

0
137

Sri-Lankas-Rangana-Herath-008இலங்கை அணியின் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், டெஸ்ட் போட்டிகளில் ஹட்-ட்ரிக் சாதனை புரிந்த இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார். இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் காலியில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியிலேயே இச்சாதனையை அவர் புரிந்தார்.

இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று, போட்டியின் 25ஆவது ஓவரின் முதலாவது பந்தில், அடம் வோஜஸை ஆட்டமிழக்கச் செய்த ஹேரத், அடுத்த பந்தில், பீற்றர் நெவிலை ஆட்டமிழக்கச் செய்தார். ஹட்-ட்ரிக் பந்தில், ஹேரத்தின் பந்தை எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க்கின் காலில் பந்து அடித்தது. ஆனால், அது ஆட்டமிழப்புக் கிடையாது என நடுவர் அறிவித்தார்.

எனினும், தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டம் மூலமாக அந்தத் தீர்ப்பை, இலங்கைத் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், மறுபரிசீலனை செய்ய, அது ஆட்டமிழப்பு என அறிவிக்கப்பட்டது. எனவே, ரங்கன ஹேரத்தின் ஹட்-ட்ரிக் உறுதிப்படுத்தப்பட்டது.

நுவான் சொய்ஸாவுக்குப் பின்பு, டெஸ்ட் போட்டிகளில் ஹட்-ட்ரிக் சாதனை புரிந்த இலங்கையர் என்ற பெருமை, ரங்கன ஹேரத்துக்குக் கிடைத்தது.

LEAVE A REPLY